நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!
ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புதையல் எடுக்கும் ஆசையில் இங்குள்ள கதிரெப்பள்ளி கிராம கோயிலில் தனது 3 வயது பெண் குழந்தையை நரபலியிட சம்மதித்தார்.
இதையடுத்து, அந்த குழந்தையை நரபலியிடுவதற்காக ஒருவன் தூக்கிச் சென்றான். ஆனால், கோயிலுக்கு போகும் வழியில் அந்த குழந்தை துடிதுடித்து அழுததை சகித்துக் கொள்ள முடியாத அந்த படுபாதகன், கதறக் கதற அந்தக் குழந்தையின் கழுத்தை திருகி அதன் உயிரை பறித்தான்.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவனிடமும் பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே நரபலியிட துணிந்த அந்த பாசக்கார(?) தந்தையிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.