குஜராத்: 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியர்!!
குஜராத் மாநிலம் சூரத் நகரின் நவ்சாரி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியாத, அந்த சிறுமியின் ஏழ்மையான குடும்ப பின்னணியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளிக் கழிப்பறையில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
37 வயதான அந்த வக்கிர புத்தி கொண்ட பிரின்சிபல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.