நகை தொழிலில் மாறிய தமன்னா!!
சினிமாவில் பலரும் நடிப்பு தவிர, பிற தொழில்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். பல நடிகைகள் சொந்தமாக ஆடை அலங்காரம், புடவை கடை, பேஷன் ஷோரூம்கள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது சொந்தமாக நகை வியாபாரம் செய்யும் தொழிலில் களமிறங்கியுள்ளார். ‘ஒயிட் அண்ட் கோல்ட்’ என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளாராம்.
இந்த டிசைனிங்கில் இந்தியாவின் சில முன்னணி டிசைனர்கள் ஈடுபட்டிருந்தாலும், தமன்னா தனது சொந்த வடிவமைப்பையும் இதில் ஈடுபடுத்தப் போகிறாராம்.
தமன்னா தற்போது ஆர்யாவுடன் இணைந்து ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, இரண்டு தெலுங்கு படங்களும் இவர் கைவசம் உள்ளது. தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகும் ‘பாகுபலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.