கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு சன்மானம்!!

Read Time:1 Minute, 57 Second

51c10b33-ea7e-4e3c-b931-8e7685844d1e_S_secvpfசுவிட்ஸர்லாந்து நாட்டில் உள்ள ஹெச்.எஸ்.பி.ஸி. வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த 628 இந்தியர்களின் பெயர் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு ரொக்க சன்மானம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் இந்த தகவலை வெளியிட்ட ஹெச்.எஸ்.பி.ஸி. வங்கியின் முன்னாள் ஊழியரான ஹெர்வே ஃபால்சியானியிடம் உள்ள முழுவிபரங்களை பெறும் நோக்கத்தில் அவருக்கு ரொக்க சன்மானம் வழங்க தயாராக உள்ளதாகவும், தன்னிடம் உள்ள விபரங்களை இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் கடைசியாக லண்டன் தலைநகர் பாரீசில் அவர் தங்கியிருந்த முகவரிக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை தகவல் அனுப்பியுள்ளது.

இந்த ஏற்பாட்டை அவர் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது தொடர்பாக ஹெர்வே ஃபால்சியானியிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என தெரியவருகிறது.

இந்திய வருமான வரித்துறை சட்டங்களின்படி, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்த ஒருவர் சிக்கிக் கொண்டால் அவர் பதுக்கி வைத்திருந்த தொகைக்கு அபராத வரி விதிக்கப்படும். இந்த வரித்தொகையில் இருந்து 30 சதவீதம் வரை இதுபற்றிய தகவல் அளித்த நபர்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்ற (திரைவிமர்சனம்)!!
Next post பண மோசடி விவகாரத்தில் சிக்கிய நடிகை..!!