பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொலை!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகராவில், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடப்பட்டிருந்த நபரை, சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் நேற்றிரவு சுட்டுக் கொன்றதாக அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயித் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட
35 வயதான ஜாவித் அகமது வாசா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் விடுதலையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு பிஜ்பெகராவில் உள்ள தனது வீட்டில் இருந்த ஜாவிதை, தீவிரவாதிகள் துப்பாகியால் சுட்டனர். ரத்த வெள்ளத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜாவித், காயம் காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.