5 நிமிடங்களில் தேங்காய் நார் உரிக்கும் நாய்!!
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் ரோய் டேனியல். இவரிடம் 2 வயது நிரம்பிய பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆண் நாய் உள்ளது. இதற்கு அவர் பிரெஞ்சு மாஷிப் என்று பெயர் சூட்டி உள்ளார்.
அது குட்டியாக இருந்தபோது தேங்காயில் இருந்து நார் உரிப்பது எப்படி என்பதை ரோய் டேனியல் கற்றுக்கொடுத்தார்.
இதனால் அது தற்போது 5 நிமிடங்களுக்குள் நாரை அகற்றி தேங்காயை அவரிடம் கொடுக்கிறது. அத்துடன் இந்த நாய் அந்த பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு கண்காட்சிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது.