யார் குழந்தை?: மகாபலிபுரத்தில் தனியாக தவித்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு சிறுமியை போலீசார் கண்டெடுத்துள்ளதாக இன்றிரவு பல தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘டுவீட்’ செய்துள்ளனர்.
இதனை அந்த பிரபலங்களின் நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்களும் ‘ரிடுவீட்’ செய்தபடி உள்ளனர். மாலை மலர் வாசகர்களில் யாருக்காவது இந்த செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை அடையாளம் தெரிந்தால், அந்த சிறுமி மகாபலிபுரம் போலீசாரின் பாதுகாப்பில் இருப்பதாக அவளது பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு தகவல் அளித்து உதவிட வேண்டுகிறோம்.