கேரளாவில் கொடூரம்: ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பள்ளி சிறுமிகள்- 6 பேர் கைது!!
கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிகளை ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தை, மகன் உட்பட 6 கொடூரன்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் 5, 6, மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 3 பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகள், ஒன்றரை வருடங்களாக அவர்களது உறவினர் ஒருவரின் துணையுடன், பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை அங்கன் வாடி ஆசிரியரிடமும், பழங்குடிகள் நல செயற்பாட்டாளர் ஒருவரிடமும் தெரிவித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ரவி(தந்தை), ரஞ்சித் (மகன்), மல்லேஷ், கணேஷ், சந்தோஷ்குமார், பிஜூ என்ற 6 பேரை கைது செய்த கேரள போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, குற்றவாளிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
கொடூர உறவினர் உட்பட, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 11 பேரை போலீசர் தீவிரமாக தேடி வருகிறனர்.