டேபோடாங் ஏவுகணையை ஏவியது வட கொரியா

Read Time:4 Minute, 42 Second

korea_.jpgஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கக் கூடிய டேபோடாங்2 வகை ஏவுகனை உள்ளிட்ட மொத்தம் 6 ஏவுகனைகளை வட கொரியா ஏவி சோதனையிட்டுள்ளது. வட கொரியாவின் அணு, ஏவுகணை திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், வட கொரியா இதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

இந் நிலையில் சக்தி வாய்ந்த 6 ஏவுகனைகளை வட கொரியா ஏவி பரிசோதனை நடத்தியுள்ளது. இதில் டேபோடாங்2 வகை ஏவுகனை, அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கக் கூடிய திறன் படைத்தது.

இருப்பினும் இந்த டேபோடாங் ஏவுகனை இலக்கை நோக்கி சரியாக பாயாமல் பாதியிலேயே சிதறி விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மற்ற ஏவுகனைகள் ஜப்பான் கடலில் போய் விழுந்தன.

வட கொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், அமெரிக்கா ஆகியவை கண்டனம் தெரவித்துள்ளன. வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டி வரும் என ஜப்பான் எச்சரித்துள்ளது. வட கொரியாவின் செயல் ஆத்திரமூட்டக் கூடியதாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகனை சோதனை குறித்து விவாதிப்பதற்காக ஐ. நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது. ஜப்பான் கோரிக்கையின் பேரில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ஏவுகனை சோதனையைத் தொடர்ந்து, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. தென் கொரிய ராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதட்டம் காரணமாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பங்கு வர்த்தகத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏவுகனை சோதனை குறித்து இதுவரை வட கொரிய அரசுத் தரப்பிலிருந்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இருப்பினும் வட கொரியாவின் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

சர்வதேச சமுதாயத்தின் தொடர் கோரிக்கையை வட கொரியா அவமதித்து விட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்னோ கூறியுள்ளார்.
வடகொரியாவின் அலட்சியப் போக்கு தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஸ்னோ கூறியுள்ளார்.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், தனது மூத்த ஆலோசகர்களுடன் வட கொரிய ஏவுகனை சோதனை குறித்து ஆலோசனை நடத்தினார். வட கொரியா பரிசோதித்துப் பார்த்து ஏவுகனைகளில் ஐந்து ஏவுகணைகள் முன்னாள் சோவியத் யூனியனின் ஸ்கட் ரக ஏவுகனைகள் ஆகும்.

சில நூறு கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கும் நடுத்தர ரக ஏவுகனைகள் இவை. டேபோடாங்2 ரக ஏவுகனை மட்டுமே நீண்ட தூர ஏவுகனை ஆகும். கிட்டத்தட்ட 6,000 கிலோமீட்டர் தொலைவுக்கு இவற்றை செலுத்தி இலக்குகளை தாக்க முடியும். இருப்பினும் இந்த ஏவுகனை சோதனை தோல்வியைத் தழுவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏவப்பட்ட 42வது நொடியிலேயே இந்த ஏவுகணை திசை மாறி வெடித்துச் சிதறிவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த ஏவுகணை தயாரிப்பில் வட கொரியாவுக்கு பாகிஸ்தான் பெரும் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜெர்மனி கனவை தகர்த்த இத்தாலி: 2-0
Next post வெற்றிகரமாக ஏவப்பட்டது டிஸ்கவரி!