சிங்கம்புணரி அருகே 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வாலிபர் கைது!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வகுத்தெழுவன்பட்டி புதூரை சேர்ந்த 10–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர், மதுரை மாவட்டம் மூவன்செவல்பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது21) என்பவருடன் பழகி உள்ளார்.
வகுத்தெழுவன்பட்டி புதூரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு தமிழரசன் வந்தபோது இந்த பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தமிழரசன், மாணவியை கற்பழித்து விட்டதாக சிங்கம்புணரி போலீசில், மாணவியின் தாய் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் விசாரணை நடத்தினார். மருத்துவ பரிசோதனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.