கோவையில் 6 கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

Read Time:1 Minute, 36 Second

0c2dc34f-52f9-442c-b671-6acda5c71633_S_secvpfகோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த நகைப்பட்டறை அதிபர் வெங்கடேஷ். இவர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தங்கத்தை மொத்தமாக வாங்கி வந்து ஆபரணமாக செய்து கொடுப்பது வழக்கம்.

கடந்த ஜனவரி 31–ந்தேதி சென்னையில் இருந்து ரெயில் மூலம் 8.7 கிலோ தங்கத்தை கொண்டு வந்தார். ரெயில் நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டருகே வந்தபோது காரில் வந்த கும்பல் நகைப்பட்டறை அதிபரை வழிமறித்து அவரை அரிவாளால் தாக்கி தங்கத்தை பறித்துச்சென்றது.

இதையடுத்து பிஜோ, சிஜோ, பிரதீப், சிண்டோ, நியாஸ், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இதேபோன்று பலகுற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸ் துணை கமிஷனர் ரம்யா பாரதி மேற்கண்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொண்டார்.

கமிஷனர் விஸ்வநாதன் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். 6 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி விமானநிலையத்தில் ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் ஊழியர்கள் விஷம் குடித்தது அம்பலம்!!
Next post தூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை!!