ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் சில்மிஷம்: திருமங்கலம் கண்டக்டர் கைது!!
மதுரையில் இருந்து பாபநாசத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக அரசு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் திருமங்கலத்தை சேர்ந்த தங்கச்சாமி கண்டக்டராக செயல்பட்டார்.
பஸ்சில் பயணிகள் அனைவரும் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பெண் பயணி ஒருவரிடம் கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் கூச்சலிடவே பயணிகள் அனைவரும் விழித்து கண்டக்டர் தங்கச்சாமியை பிடித்தனர். பின்னர் அவர் நத்தம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சாமியை கைது செய்தனர்.
கண்டக்டர் சில்மிஷம் செய்த பெண் தென்காசி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர். பொள்ளாச்சியில் ஆசிரியராக பணியாற்றும் இவர், ஊருக்கு திரும்பியபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.