கட்டணம் செலுத்தாததால் 1-ம் வகுப்பு மாணவியை அடித்து சித்திரவதை செய்த டீச்சர்!!
மும்பையின் புறநகர் பகுதியான பிவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கல்விக்கட்டணம் செலுத்தாத 1-ம் வகுப்பு சிறுமியை அதன் வகுப்பாசிரியை ஈவிரக்கமின்றி அடித்துள்ள சம்பவம் பெற்றொர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த திங்கள் அன்று, கல்விக்கட்டணம் செலுத்தாததால் 1-ம் வகுப்பு சிறுமியை வகுப்பறையில் மற்ற சிறுமிகள் முன் அவமானப்படுத்தி, பெஞ்சின் மீது நிற்கச் சொல்லி, சிறுமியின் கன்னத்தில் மாறி மாறி அறைந்துள்ளார்.
இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பள்ளிக்கு செலுத்த வேண்டிய 3000 ரூபாய் கட்டணத்தையும் செலுத்தி, அதற்கான ரசீதையும் பள்ளியில் சமர்ப்பித்துள்ளதாக பெற்றொர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றொர் அளித்த புகாரின் பேரில் அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.