அமெரிக்கப் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டி அகற்றம்: டெல்லி டாக்டர்கள் சாதனை!!

Read Time:2 Minute, 28 Second

24c703c5-c84f-454a-98be-5f29fb65f5e0_S_secvpfஇந்தியாவில் வாழும் அமெரிக்காவை சேர்ந்த 50 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டியை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

ஆனி காட்ரின் ஒரோ(50) என்ற அந்த நோயாளி, கடந்த பல ஆண்டுகளாக கருப்பை புற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது வயிற்றில் வளர்ந்திருந்த சுமார் 15 கிலோ எடை கொண்ட புற்றுக்கட்டி இதர உள்ளுறுப்புகளின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தி பல பாகங்களின் நரம்புகள் வழியாக பாய வேண்டிய ரத்தத்தை உறைய வைத்து.

இதனால், உடலுக்கு செல்லும் ரத்தசுழற்சி முறையிலும் கடும் பிரச்சனை ஏற்பட்டு, சில வேளைகளில் சுவாசக் கோளாறினாலும் இவர் அவதிப்பட்டு வந்தார். கடுமையான உடல் வலியாலும், மன வேதனையாலும் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு ஆபரேஷன் செய்து அந்த புற்றுக்கட்டியை அகற்ற புது டெல்லியில் உள்ள ராஜிவ் காந்தி புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

ஆனி காட்ரின் ஒரோவின் சிறுநீரகப் பையும் கருப்பையும் ஒன்றோடொன்று இனைந்தவாறு இருந்த நிலையில் சுமார் 15 கிலோ எடை கொண்ட இந்த புற்றுக்கட்டி ஆபரேஷனின்போது உடைந்துப் போனால், புற்றின் பாதிப்பு இதர பகுதிகளுக்கும் பரவி விடும் ஆபத்தான சூழ்நிலையில் இந்த ஆபரேஷன் டாக்டர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது.

எனினும், வெற்றிகரமாக அந்த புற்றுக்கட்டி அகற்றப்பட்டதாகவும், இதற்கு முன்னர் 85 கிலோ எடை கொண்டவராக இருந்த ஆனி காட்ரின் ஒரோ தற்போது 70 கிலோவாக குறைந்து விட்டதாகவும் டாக்டர்கள் இன்று தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: 4 பேரை கைது செய்தது கோவா போலீஸ்!!
Next post தென்னை மரத்தின் வேர்ப் புழுவில் வளரும் பூஞ்சை புற்றுநோயை குணப்படுத்தும்: கேரள விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!