தென்னை மரத்தின் வேர்ப் புழுவில் வளரும் பூஞ்சை புற்றுநோயை குணப்படுத்தும்: கேரள விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

Read Time:2 Minute, 38 Second

3d23df19-a8e2-4358-a130-75032438c58d_S_secvpfதென்னை மரத்தின் வேர்ப் புழுவின் உடலில் வளரும் ஒரு வகையான பூஞ்சைக்கு புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் இருப்பதை கேரளா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளானர்.

கேரள விவசாய பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோய் ஆய்வு மையம் இணைந்து பூஞ்சைகளில் இருக்கும் புற்றுநோயயை குணப்படுத்தும் பண்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்னை மரத்தின் வேர்ப் புழுவில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவில், தென்னை மரத்தின் வேர்ப் புழுவின் உடலில் வளரும் கார்டிஸேஸ் பேரினத்தை அல்லது கேட்டிபில்லர் அழைக்கப்படும் பூஞ்சை டி-க்கு புற்றுநோயை கட்டுப்படுத்தும் பண்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளார்கள்.

அந்த வேர்ப்புழுவில் உள்ள பூஞ்சையானது வளர்ந்ததும் அந்த புழுவை கொல்வதன்மூலம் இயற்கையாகவே அந்த புழுக்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் இந்த பூஞ்சையை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்துதல், வயதாவதை தடுக்கும் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் தயாரிப்பதை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக கேரள விவசாய பல்கலைக்கழகத்தின் முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

இந்த பூஞ்சைகளை ஆய்வகங்களில் வளர்க்க முடியுமானால், கிமோதெரபிக்கு பதிலாக இந்த பூஞ்சையை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்த முடியும். மேலும் கேட்டிபில்லர் இனத்தை சேர்ந்த பூஞ்சைகள் ஒரு கிலோ 5 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை பூஞ்சைகள் ஆயுர்வேத மருத்துவ நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்கப் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டி அகற்றம்: டெல்லி டாக்டர்கள் சாதனை!!
Next post பூச்சு மருந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!