வீட்டு மாடியில் குடியிருந்த பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த பொதுமக்கள்!!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புக்கராய சமுத்திரம் மண்டல சப்– இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராமையா. இவரது வீட்டின் மாடியில் கணவன்–மனைவி குடியிருந்து வருகிறார்கள்.
கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். தனிமையில் இருந்த அந்த பெண்ணின் வீட்டுக்குள் சப்– இன்ஸ்பெக்டர் ராமையா உனது கணவர் பேசுகிறார் என்று கூறி செல்போனை கொடுத்து புகுந்தார்.
பின்னர் அந்த பெண்ணை அவர் கற்பழித்தார். பெண் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். சப்– இன்ஸ்பெக்டர் ராமையாவை அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். பெண்ணை கற்பழித்த சப்– இன்ஸ்பெக்டர் ராமையா கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.