கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்!!
மேற்கு வங்காளத்தில் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
ஹவுரா மாவட்டம் நசிர்கஞ்ச் காவல் சரகத்திற்குட்பட்ட லேபுகாலி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இன்று அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.