கோவாவை தொடர்ந்து மராட்டியத்தில் ஆடை மாற்றும் பெண்ணை செல்போனால் படம் பிடித்த பேப் இந்தியா ஊழியர் கைது!!

Read Time:2 Minute, 36 Second

3f64cc71-e0c3-412a-8191-60c79462007a_S_secvpfமத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கைதான கடை ஊழியர்கள் 4 பேர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே ஆயத்த ஆடை நிறுவனத்தின் மராட்டிய மாநில கிளையில் ஆடை மாற்றிய ஒரு பெண்ணை தனது செல்போனால் ரகசியமாக படம் பிடித்த மேலும் ஒரு ஊழியர் கைது செய்யப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாராபாய் பார்க் பகுதியில் பேப் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஆயத்த ஆடை கடை உள்ளது. கடந்த 31-ம் தேதி இந்த கடையில் ஆடை வாங்கிய ஒரு பெண் அதை உடுத்திப் பார்க்க தனியறைக்கு சென்றபோது அந்த கடையின் ஊழியர் ஒருவர் அந்த காட்சியை தனது செல்போன் மூலம் ரகசியமாக படம் பிடிப்பதை அந்தப் பெண் பார்த்து விட்டார்.

அந்த ஊழியரை அவர் விரட்டிச் சென்றபோது, கடையின் ஒதுக்குப்புறமாக சென்ற ஊழியர், தனது செல்போனில் படம் பிடித்து பதிவு செய்த காட்சிகளை உடனடியாக அழித்து விட்டார். இது தொடர்பாக அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த கடைக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, புகார் அளித்த பெண் ஆடை மாற்றும் காட்சியை அந்த ஊழியர் ரகசியமாக படம் பிடித்ததும், இதை கண்டு திடுக்கிட்ட அந்தப் பெண் விரட்டுவதை கண்டு அந்த காட்சியை அவர் அழித்த காட்சிகளும் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தன. இதனையடுத்து, ஊழியர் பிரகாஷ் ஆனந்தா இஸ்புர்லே என்பவர் கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன்!!
Next post சமூக அக்கறையுடன் கூடிய மும்பை ஐ.ஐ.டி.யின் முட்டாள் தின வீடியோவிற்கு அமோக வரவேற்பு – வீடியோ இணைப்பு!!