பெரம்பலூர் அருகே இளம்பெண் கற்பழித்து கொலை!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண் பாவூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி வன பகுதி அருகே ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது.
இந்த பருத்தி தோட்டத்தில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றினார்கள். ரோஸ் கலரில் சுடிதார் பேண்டும், கருப்பு, வெள்ளை நிறத்தில் மேல் டாப்சும் அணிந் திருந்தார். அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது.
அவர் அணிந்திருந்த நகைகள் பறிக்கப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டது. மேலும் இறந்து கிடந்த பெண்ணின் உடல் அருகில் பலரது கால்கள் தடங்களும் இருந்தன. அந்த பகுதியில் இருந்து ரோடு வரை மோட்டார் சைக்கிள் சென்று வந்த தடயமும் இருந்தது.
பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று முதற் கட்ட விசாரணையை தொடங்கினார்கள்.
25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற கும்பல் பருத்தி காட்டுக்குள் இழுத்து சென்று கற்பழித்து விட்டு பின்னர் நகைகளை எடுத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும், பருத்தி காடு வழியாக வந்த அந்த பெண்ணை வழிமறித்து கற்பழித்த கும்பல் கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.