இண்டர்நெட் மையத்தில் ஆபாச சேட்டை- 11 ஜோடிகள் கைது!!
மராட்டிய மாநிலம், தானே மாவட்டம், உல்லாஸ் நகர் ரெயில் நிலையம் அருகேயுள்ள ஒரு சைபர் கபேவில் இருளை பயன்படுத்தி ஆண்-பெண்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாக அப்பகுதி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, இன்று அந்த மையத்தை சுற்றிவளைத்த போலீசார் உள்ளே ஆபாச கோலத்தில் இருந்த 11 ஜோடிகளை கைது செய்தனர். சைபர் கபேவின் உரிமையாளர் மற்றும் மேனேஜர் என கைது செய்யப்பட்ட மொத்தம் 24 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.