By 10 April 2015 0 Comments

மனோரமாவிடம் ஆசீர்வாதம் பெற்ற விவேக்!!

manoவிவேக் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் விவேக் அஜித்துடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய காமெடியால் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களையும் கூறிவருகிறார்.

மேலும் இவர் மனிதநேய செயல்பாடுகளுக்காக தனது பங்கை செலுத்திக் கொண்டும் மரக்கன்றுகள் நட்டு சமூகத்தின் மேல் உள்ள ஆர்வத்தை அவ்வப்போது காண்பித்தும் வருபவர். இந்நிலையில், பழம்பெரும் நடிகை மனோரமாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து விவேக் கூறும்போது, “தொலைக்காட்சியில் தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்தேன். இதில் ஆச்சி மனோரமாவின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. உடனே அவரை சந்திக்க ஆசைப்பட்டேன். அதனால் ஆச்சி வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றேன்” என்றார்.

விவேக் தற்போது ‘கஸ்மோரா’ என்னும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதில் விவேக் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் நடிக்கவிருக்கிறார்.



Post a Comment

Protected by WP Anti Spam