அயோத்தியில் கோவில் வளாகத்தில் பூசாரி படுகொலை!!
உத்தர பிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கோவில் பூசாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தி நகரில் உள்ள பிரபல பிரகாம் பாபா கோவிலில் பூசாரியாக இருந்த 62 வயது முதியவர் இன்று கோவில் வளாகத்தில் அவர் தங்கியிருந்த அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்தன.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் அதிகாரத்தை பெறும் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.