செம்மரக்கடத்தல் வேட்டையில் ராசிபுரம் கடத்தல்காரர் உள்பட 14 கூலி ஆட்கள் கைது: ஆந்திர போலீசார் நடவடிக்கை!!

Read Time:1 Minute, 52 Second

f7a4cc98-b30e-4b4e-912e-660f9806e5e9_S_secvpfதிருப்பதி மலையில் செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் மீது ஆந்திர வனத்துறையில் நடத்திய தாக்குதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பிச் சென்றதாக போலீசார் கருதினார்கள். அவர்களை பிடிக்க சித்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக எல்லையான ரொம்பசெர்லா, பாக்ரா பேட்டை, எர்ரவாரி பாளையம், கேவுபள்ளி, விதூர்குப்பம், பாலசமுத்திரம், நகரி, நாகலாபுரம், குப்பம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கடத்தல்காரர் பாலசுப்பிரமணி உள்பட 14 கூலி ஆட்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான பாலசுப்பிரமணி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அச்சப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன். இவர் மீது 8 வழக்குகள் உள்ளது.

இவர்களிடம் இருந்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள 3½ டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.2½ லட்சம் ரொக்கப் பணமும், கடத்தலுக்கு பயன் படுத்திய 6 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கண்ட தகவலை சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார். இவர்கள் தவிர தமிழகத்தைச் சேர்ந்த மேலும் பலரை தேடி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஞ்சனா-2 படத்திற்கு யுஏ சான்றிதழ்!!
Next post கேரளாவில் ரெயிலில் அடிபட்டு பா.ஜனதா பெண் நிர்வாகி பலியானதை செல்போனில் படம் எடுத்த வாலிபர்கள்!!