பெண் கொலை வழக்கில் 4 பேர் கைது!!
காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் இரட்டை பிராமணர் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது குடும்பத்துக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் விஜி (40) குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே வீட்டுமனை தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புல் செதுக்குவதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 6-ந் தேதி வெண்ணிலா கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விஜி, அவரது மனைவி அனிதா (32), அமலா (23), நீலகண்டன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.