தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!!

Read Time:2 Minute, 6 Second

d4f6dc41-46dd-4055-bb86-7f30b9a8cfa5_S_secvpfதாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் வக்கீல்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், ‘1212-ம் ஆண்டு ராஜா பரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது’ என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, தாஜ்மகாலுக்கு உரிமை கோரி வழக்கு தொடர அனுமதிக்கும்படி வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை இதே நீதிமன்றத்தின் நீதிபதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது!!
Next post பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் பி.ஏ. தேர்வு எழுத ஆஜரான புதுமைப் பெண்!!