சூர்யா மீது வழக்கு…!!
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வெங்கட் பிரபு வின் மாஸ் படத்தின் முழு படப்பிடிப்பை முடித்து கொடுத்து 24 படத்துக்கு ரெடியானார்.
இன்று விக்ரம் குமார் இயக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அணில் கபூர் வெளிநாட்டில் பிரபலமாக ஒளிபரப்பு ஆகி வரும் அமெரிக்கன் டிவி சீரீஸ் ’24′, ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.
சூர்யா 24 தலைப்பும் நான் வாங்கி இருக்கும் 24 தலைப்பும் ஒரே மாதிரி உள்ளது. இது பற்றி சூர்யா விடமே பேசியுள்ளார், ஆனால் எந்தவொரு முடிவுக்கும் படக்குழு வரவில்லை. இப்படியே தொடர்ந்தால் சூர்யா மீது வழக்கு போடுவது உறுதி என தெரிவித்துள்ளாராம்.