தெலுங்கானா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று- ஒன்றரை லட்சம் கோழிகள் அழிப்பு!!

Read Time:1 Minute, 46 Second

ae6611cb-91f6-435b-b854-ed4ed8a7ecf8_S_secvpfதெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் தொற்று (H5N1 வைரஸ்) தோன்றியதையடுத்து இங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவரும் சுமார் ஒன்றரை லட்சம் கோழிகள் மற்றும் முட்டைகளை அழிக்க கால்நடைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இங்குள்ள ஹயாத்நகர் மண்டலத்துக்கு உட்பட்ட தோருர் கிராமத்தில் இருக்கும் கோழிப்பணைகளில் வளர்ந்து வரும் சில கோழிகளை போபாலில் உள்ள விசேஷ ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்தபோது அவற்றில் இந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இங்குள்ள ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோழிகளையும், முட்டைகளையும் இன்னும் 72 மணி நேரத்துக்குள் அழித்துவிட மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் 65 அலுவலர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இங்கிருந்து கோழிகள் மற்றும் முட்டைகளை வெளியிடங்களுக்கு கொண்டுசெல்ல தடை விதித்துள்ள அதிகாரிகள், இப்பகுதியின் சுற்றுப்பட்டில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவுக்குட்பட்ட இடத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது!!
Next post கொடூரத்தின் உச்சம் : 18 மாதக் குழந்தை பாலியல் பலாத்காரம்!!