சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த காக்கா முட்டை!!

Read Time:1 Minute, 47 Second

7a0304dc-c33a-47d0-b0a3-3a5ec61f89d5_S_secvpfஅறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. அதைத் தொடர்ந்து இரண்டு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த படம் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 3 விருதுகளை வாங்கியுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு, சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருது என இந்த மூன்று விருதுகளையும் காக்கா முட்டை படம் வென்றுள்ளது. இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்!!
Next post நடிகரை திருமணம் செய்யமாட்டேன்: சமந்தா உறுதி!!