வைர கிட்டாரை வாசிக்கும் வைர விரல்கள் – வீடியோ இணைப்பு!!

Read Time:2 Minute, 5 Second

998886c6-5649-444f-bd55-75468b5c5ba7_S_secvpfஒரு நிறுவனம் தனது தயாரிப்பை பிரலப்படுத்த என்ன செய்யும், அதிகபட்சம், புகழின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பல கோடி சம்பளம் கொடுத்து விளம்பரப் படம் எடுப்பார்கள். ‘இது எல்லாரும் செய்றதுதானே! புதுசா என்ன செய்யலாம்?’ என்று யோசித்த பிரபல நகை தயாரிப்பு நிறுவனம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதைதான் இது.

உலகின் சிறந்த நகை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹாங்காங்கைச் சேர்ந்த ‘ஆரோன் ஷம்’ தனது புதிய தயாரிப்பான ‘கோரோநெட்’ என்ற வைர கிரீடத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நகைக் கண்காட்சியில் பங்கேற்று, ‘ஈடன் ஆப் கோரோநெட்’ என்ற கிட்டாரை அறிமுகப்படுத்தியது.

நகைக் கண்காட்சியில் எதற்கு கிட்டார் என்று கேட்பவர்களுக்கான பதில்:

மார்க் லுய் என்ற பன்முகத்திறமை கொண்ட வடிவமைப்பாளரால் 11,441 வைரத்துண்டுகளையும், வெள்ளைத்தங்கத்தையும் கொண்டு பல மாதங்களாக இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘கோரோநெட் டைமண்ட் கிப்ஸன் கிட்டார்’. இதன் மதிப்பு 2 மில்லியன் டாலர் (12 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்)

உலகின் மிகவும் விலைமதிப்புள்ள கிட்டார் என்ற கின்னஸ் சாதனையையும் இந்த கிட்டார் படைத்துள்ளது. வைர கிரீடத்துக்கு இலவச விளம்பரம். எக்ஸ்ட்ரா போனசா கின்னஸ் சாதனை… சூப்பர்ல…..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசாமில் கார் திருட்டு வழக்கில் பெண் எம்.எல்.ஏ. கைது!!
Next post பீகாரில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை!!