ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் இணைந்தன: உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!!

Read Time:2 Minute, 6 Second

fc004920-b46c-4f3a-9d1d-36b31b5c2239_S_secvpfசீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியா மற்றும் செல்வாக்கு மிகுந்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் உலக வங்கிக்கு போட்டியாக சீனாவின் ஆதரவுடன் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ஆசிய பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவி செய்யும் வகையில் இவ்வங்கி உருவாக்கப்படுகிறது.

இதற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சீனா, இந்தியா, நேபாளம், இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பிரேசில், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் என மொத்தம் 57 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு திறந்த மற்றும் உள்ளடக்கிய பல்தரப்பு வளர்ச்சி வங்கி என்பதால், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடு முடிவடைந்தபோதிலும், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடரும் என்று சீனாவின் துணை நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் ஜப்பானும் இந்த வங்கியில் இணையாமல் ஒதுங்கியபோதும், தங்கள் ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த கழிப்பறையை பயன்படுத்துவது?: சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கழிப்பிட பிரச்சனையால் அவதிப்படும் திருநங்கையர் சமூகம்!!
Next post உ.பி.,யில் இந்துக்கள் 800 பேர் முஸ்லீம்களாக மதமாற்றம்!!