காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டதில் எந்த தவறும் இல்லை: மசரத் ஆலம் திமிர்ப் பேச்சு!!

Read Time:1 Minute, 26 Second

a9d7159d-94da-4966-95b5-44f1a1af3715_S_secvpfஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவரான மசரத் ஆலம் தலைமையில் நடந்த வரவேற்பு கூட்டத்தில், கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடியைப் பறக்க விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘அதில் எந்த தவறும் இல்லை’ என்று ஆலம் கூறியுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஆலம் கூறுகையில் “நான் தனிப்பட்ட முறையில் எந்த கொடியையும் அசைக்கவில்லை, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்தான் அப்படி செய்தார்கள். அதில் எந்த தவறும் இல்லை. 1947ல் இருந்தே இப்படி நடக்கிறது” என்றார்.

ஜம்மு காஷ்மீரில் முப்தி முகமது சையது தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து, சிறையில் இருந்த ஆலம் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது நடந்த சம்பவத்தை அடுத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொள்ளாச்சியில் கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை கும்மாளம்: மனைவி புகாரால் கைது!!
Next post விமான நிலையத்தில் பெண் பயணியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குடியுரிமை அதிகாரி கைது!!