திருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ் – வீடியோ இணைப்பு!!

Read Time:2 Minute, 42 Second

ca7787aa-7099-4333-9e8f-bd19c87db796_S_secvpfநாடெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூபில் 90 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட தீபிகா படுகோனின் ‘மை சாய்ஸ்’ என்ற வீடியோ பெண் சமத்துவத்தையும் பெண் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது.

இதன் அடுத்த கட்டமாக திருநங்கைகளைக் கொண்டாடும் ‘மை சாய்ஸ்’ என்ற வீடியோ யூ-டியூபில் வெளியாகியுள்ளது. இந்த 2 நிமிட வீடியோவில் பல திருநங்கைகள் தங்களின் அனுபவங்களை காத்திரமாக எடுத்திரைக்கின்றனர். திருநங்கைகளின் இருள் சூழ்ந்த வாழ்வை சித்தரிக்கும் வகையில் இந்த வீடியோ முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் தங்களால் தேர்ந்தெடுக்க முடியாததைக் குறித்து “திருநங்கையாக பிறப்பதை நான் தேர்வு செய்யவில்லை, வீட்டிலிருந்து துரத்தப்பட்டு, தகுதியிருந்தும் வேலை கிடைக்காமல் தெருவில் பிச்சையெடுப்பதை நான் தேர்வு செய்யவில்லை. தினம் தினம் சமூகத்தால் அவமானப்படுத்தப்படுவதையும் நான் தேர்வு செய்யவில்லை” என்று கூறும் திருநங்கைகள்,

தங்கள் தேர்வு குறித்து கூறுகையில் “ஆணாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாகவோ வாழ்வது என்னுடைய தேர்வு, என்னுடைய பாலினத்தையோ, பெயரையோ மாற்றிக்கொள்வதும், ஆணாகவோ பெண்ணாகவோ தோற்றமளிப்பதும் என்னுடைய தேர்வு.

நீங்கள் உண்மையிலேயே எங்களுக்கு உதவி செய்ய நினைத்தால் எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை முதலில் நிறுத்துங்கள் என்ற தெற்காசிய திருநங்கைகள் சமூகத்தின் தலைவர் அபினாவின் வேண்டுகோளுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் இதை செய்யத் தொடங்கும் வேளையில் திருநங்கைகளின் வாழ்வில் மாற்றம் உண்டாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான நிலையத்தில் பெண் பயணியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குடியுரிமை அதிகாரி கைது!!
Next post முகநூலில் முதல்-மந்திரியின் படத்திற்கு அவமதிப்பு: மைசூரில் பரபரப்பு!!