அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி ஓரின சேர்க்கை இளைஞர்கள் திருமணம்: பெற்றோர்கள் நடத்திவைத்தனர்!!

Read Time:2 Minute, 37 Second

b2ca3f82-fed7-4b66-821b-c3d69a1f516e_S_secvpfஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது அமெரிக்கா கலாச்சாரத்தில் புதியது அல்ல. ஆனால் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஓரின சேர்க்கை இளைஞர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் தான் இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று கேட்கலாம்?

அந்த இளைஞர்கள் திருமணத்தை அவர்களது பெற்றோர்களே முன்னின்று நடத்தி வைத்தது ஆச்சரியம்தானே

காதல் மணம் புரிந்த அந்த இந்திய வம்சாவளி இளைஞர்கள் பெயர் சந்தீப்– கார்த்திக், இதில் சந்திப் திருவனந்தபுரத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவர். கார்த்திக் அமெரிக்காவில் பிறந்தவர்.

பேஸ்புக்கில் இருவரும் அறிமுகமானார்கள். அவர்களது பழக்கம் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினார்கள். திருமணம் செய்யவும் முடிவு செய்தனர்.

தங்களது எண்ணத்தை இருவரும் பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு விட்டாரும் இவர்களது திருமணத்துக்கு பச்சை கொடி காட்டினார்கள்.

இதையடுத்து கலிபோர்னியாவில் இவர்களது திருமண ஏற்பாடு கோலாகலமாக நடந்தது. திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வழங்கினர்.

கேரள முறைப்படி அக்னி வளர்த்து அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து சந்தீப்–கார்த்திக் திருமணம் தடபுடலாக நடந்தது. வேத பண்டிதர் மந்திரம் ஓத சந்தீப் கழுத்தில் கார்த்திக் தாலி கட்டினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேங்காய் சேர்த்த கேரள உணவு பரிமாறப்பட்டது. சந்தீப்– கார்த்திக் திருமணம் இணைய தளத்தில் வெளிவந்தது.

இந்த காட்சி இந்தியாவில் உள்ள ஒரின சேர்க்கையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் பலி!!
Next post கற்பழிப்பு வழக்கில் சாமியார் அசராம் பாபு மகனுக்கு குஜராத் ஐகோர்ட்டு ஜாமீன்!!