கற்பழிப்பு வழக்கில் சாமியார் அசராம் பாபு மகனுக்கு குஜராத் ஐகோர்ட்டு ஜாமீன்!!
குஜராத்தை சேர்ந்த பிரபல சாமியார் அசராம் பாபு சிறுமி கற்பழிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகனான நாராயண் சாய் சூரத் ஆசிரமத்தில் தங்கி இருந்த ஒரு பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சூரத் ஜெயிலில் உள்ளார்.
இந்த நிலையில் நாராயண்சாய், தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது இருப்பதால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு நீதிபதி பரேஷ் உபாத்தியா, அவருக்கு 3 வாரகாலத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.