இனி ஆன்ட்ராய்ட் போனில் காதலிக்கு கைப்பட கடிதம் எழுதலாம்: கூகுள் புதிய வசதி!!

Read Time:1 Minute, 40 Second

05edebc8-cfb9-44e1-8b3d-37992e1709dd_S_secvpfகாதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து அனுப்பும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

என்னதான் அதி விரைவாக டைப் அடிப்பதற்கு ‘ஆட்டோமேட்டிக் இன்புட்’ தொழில்நுட்பம் இருந்தாலும், நம் கைப்பட எழுதுவதில் உள்ள சுகமே தனிதான். கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய வசதியைப் பயன்படுத்தி, இனி விரல்களால் நீங்கள் நினைக்கும் வார்த்தைகளை உங்கள் இஷ்டத்திற்கு எழுதி அனுப்ப முடியும்.

இதற்கென ஆண்டிராய்டு மொபைல்களுக்காக கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிகேஷனை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த அப்ளிகேஷனின் ஹைலைட்டே தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளில் எழுதலாம் என்பது தான். கூடவே ஸ்மைலிகளையும் வரைந்துக்கொள்ளலாம்.

இப்போதே கூகுள் பிளே ஸ்டோரில் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து உங்கள் கையெழுத்தில் செய்திகளை அனுப்பி நண்பர்களை அசத்துங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு தகவல்கள்!!
Next post செங்கோட்டை மாணவன் மாயம்: போலீசில் சிக்காமல் இருக்க ஊர் ஊராக ஓடும் ஆசிரியை!!