வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது!!
ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்துக்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. மெரினா கடற்கரையில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து உள்ளனர்.
சரத், விக்னேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.