திருமண நாளை கொண்டாட முடியாமல் திண்டாடும் ஐஸ்வர்யா!!!
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007ம் வருடம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் தங்களுடைய திருமண இன்று ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் இந்த வருடம் இவர்களுடைய திருமண நாளை கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவருக்கு திருமண நாள் அன்று படப்பிடிப்பு இருக்கிறதாம். மேலும் அபிஷேக் பச்சன் படப்பிடிப்புக்காக லண்டனில் இருப்பதால் இவரால் இந்தியா திரும்பி வர முடியாத நிலையில் இருக்கிறாராம்.
இதனால் இந்த வருடம் இவர்களுடைய திருமண நாளை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் படப்பிடிப்பு முடிந்த பிறகு தங்களது திருமண இன்று கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.