வேலூரில் ரெயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை!!
வேலூர், தொரப்பாடி நடவாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் சோபியா (வயது 22). தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வீட்டில் தனிமையில் சோகத்துடன் அமர்ந்திருந்தார். 8.45 மணிக்கு வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளம் நோக்கி ஓடினார்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து வேலூர் நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்தது. ரெயிலை நோக்கி ஓடிய சோபியா திடீரென தண்டவாளத்தில் அமர்ந்தார். கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் அவர் மீது ஏரியது. ரெயில் சக்கரத்தில் சிக்கிய சோபியா உடல் 3 துண்டுகளாகி பரிதாபமாக இறந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் வழக்கு பதிவு செய்து சோபியா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.