காரைக்குடி அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் 15 பவுன் நகை அபேஸ்!!
காரைக்குடி அருகே உள்ள ஜெயம்கொண்டானை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது40). இவர் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமியின் உறவினர் ஆவார்.
நேற்று தமிழ்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தார். பின்னர் இங்கிருந்து ஊருக்கு புறப்படும்போது தான் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து எடுத்து கொண்டார்.
காரைக்குடி பர்மா காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறிய அவர் புதுவயல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். அப்போது தான் வைத்திருந்த நகை பை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓடும் பஸ்சில் அதனை யாரோ அபேஸ் செய்துவிட்டது தெரியவந்தது.
இது குறித்து சாக்கோட்டை போலீசில் தமிழ் செல்வி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.