கோவையில் கல்லூரிக்குள் கஞ்சா சப்ளை: கேரள மாணவர் கைது!!

Read Time:1 Minute, 51 Second

4fd405da-7505-43b9-8af5-3fe0daed5e1f_S_secvpfகோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகமாக இருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் கல்லூரி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

அப்போது கல்லூரி வளாகம் அருகே கஞ்சா பயன்படுத்திய 9 மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது அதே கல்லூரியில் பி.பி.ஏ. 2–ம் ஆண்டு படிக்கும் விஜய்(வயது 20) என்பவர் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இவர் கோவை சரவணம்பட்டி கீரணத்தம் சாலையில் அறை எடுத்து தங்கி படித்து வந்தார். இவர் கோவில்பாளையம், துடியலூர் பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி மாணவர்களிடம் அதிக விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அங்கு 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயை போலீசார் கைது செய்தனர்.

இவருக்கு கஞ்சா சப்ளை செய்த வியாரிபாரிகள் யார்– யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே டுட்டோரியலில் மலர்ந்த காதல்: மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!
Next post சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிப்மர் ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்: புதுவை கோர்ட்டு தீர்ப்பு!!