ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!

Read Time:2 Minute, 35 Second

450dc879-57fc-4610-9b40-19721f051501_S_secvpfபருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான உணவுப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன.

பலரிடம் கடன் வாங்கி, பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பல மாதங்களாக உழைத்து, கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பயிர்கள் நாசமடைந்ததை கண்டு பல விவசாயிகள் மாரடைப்பால் பலியாகினர். அடுத்தடுத்து, அன்றாடம் சில விவசாயிகள் பல்வேறு வழிகளில் தற்கொலை செய்து கொண்டு தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

அவ்வகையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரா சிங் என்பவர் மரத்தில் ஏறி தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லியில் அவரது உடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் அனுதாப செய்தி வெளியிட்டார். விவசாயிகளுக்கு யாரும் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். அவர்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் கஜேந்திரா சிங் தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களுக்குள் ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான ஹர்ஷு யாதவ் என்பவர் ஆல்வார்-மதுரா இடையே சென்ற ரெயிலின் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்து கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியை–மாணவன் காதல்: கொடைக்கானலில் பதுங்கிய ஜோடியை பிடிக்க போலீசார் விரைவு!!
Next post என் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்: பள்ளி முதல்வருக்கு 13 வயது சிறுமி எழுதிய அவசரக் கடிதம்!!