என் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்: பள்ளி முதல்வருக்கு 13 வயது சிறுமி எழுதிய அவசரக் கடிதம்!!

Read Time:3 Minute, 19 Second

bbf57c39-74be-48aa-a243-80218b4bae43_S_secvpfகுழந்தை திருமணங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 9-ம் வகுப்பு மாணவி தனது பள்ளியின் முதல்வருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ள தகவல் இன்று வெளியாகியுள்ளது.

இங்குள்ள ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின் குடாபாண்டா பகுதியில் மிலன் மித்தி உச்சா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுமியான டுலி ஹெம்ப்ராம் என்பவருக்கு ’பால்ய விவாகம்’ நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இன்று (22-ம் தேதி) அவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் ஏற்பாடு செய்து வந்தனர்.

நான் மேற்கொண்டு படிக்க வேண்டும். எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் அந்த சிறுமி கெஞ்சினாள். ஆனால், அவளது வேதனைக்குரல் பெற்றோரின் காதுகளில் எடுபடாமல் போனது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு மணமகன் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளதால் பின்தங்கிய மாவட்டங்களில் வாழும் பலர் தங்களது பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் சிறுமிகள் ஆறாம் வகுப்பில் சேரும்போதே அந்த பள்ளியின் முதல்வர்களும், தலைமை ஆசிரியர்களும் நான் 18 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அவர்களிடம் சத்தியம் செய்யவைத்து, உறுதிமொழி ஏற்றுக் கொள்ளச் செய்கின்றனர்.

திருமண நெருக்கடியில் சிக்கிக் கொண்ட சிறுமி டுலி ஹெம்ப்ராமுக்கு, தனது பள்ளியின் முதல்வரிடம் இதுபோன்ற உறுதிமொழி அளித்தது திடீரென நினைவுக்கு வந்தது. இதையடுத்து, அவராவது இந்த திருமணத்தை தடுத்து, நிறுத்த மாட்டாரா? என்ற நப்பாசையில் அந்த முதல்வருக்கு ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

22-ம் தேதி நடைபெறவுள்ள எனது திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என அந்த கடிதத்தில் டுலி ஹெம்ப்ராம் குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று 22-ம் தேதி என்பதால் இந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவளது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதா? இல்லை, முடிந்து விட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!
Next post விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எப்படி? காரணிகள் மூன்று..!! (சிறப்பு கட்டுரை)!!