மஸரத் ஆலம் மீது அதிரடி வழக்கு பாய்ந்தது: விசாரணை இல்லாமலேயே 2 வருட சிறை தண்டனை!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை பறக்க விட்ட குற்றத்திற்காக பிரிவினைவாதி மஸரத் ஆலம் மீது அதிரடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜம்மு சிறைக்கும் அவர் மாற்றப்பட்டார்.
அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும். எனவே அடுத்த 2 வருடங்களை ஆலம் சிறையில் தான் கழிக்க வேண்டும்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு திரும்பிய சையது ஷா கிலானியை வரவேற்று பேரணி நடத்திய ஆலம், பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடியை பறக்கவிட்ட இளைஞர் ஒருவரை தொடர்ந்து கொடியை பறக்கவிடுமாறு ஊக்குவித்தார் என்று கூறி கடந்த 17 ஆம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.