10 ஆண்டுகளாக இருட்டறையில் அடைந்து கிடந்த சகோதரிகள்: தன்னார்வ தொண்டு அமைப்பினர் மீட்டனர்!!

Read Time:4 Minute, 19 Second

07b47e2e-798c-43c1-ba7b-e737af83130a_S_secvpfஉடுப்பி அருகே கடபாடி பித்ரோடியா காலனியில் பழைய ஓட்டு வீடு ஒன்று உள்ளது. அந்த வீடு எப்போது இடிந்து விழுமோ என்று அச்சப்படும் வகையில் பாழடைந்து காணப்படுகிறது. அங்கு வெளியுலக தொடர்பே இன்றி சகோதரிகள் 2 பேர் அடைந்து கிடப்பதாக தனியார் தொண்டு அமைப்பு ஒன்றுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த சகோதரிகளை மீட்க தனியார் தொண்டு அமைப்பினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு கண்ட காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அந்த வீட்டில் மின்சார வசதியோ அல்லது இதர விளக்கு வசதியோ இல்லை. இதனால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் பல இடங்களில் பெரிய பெரிய புற்றுகள் காணப்பட்டன. மேலும் குப்பைக்கழிவுகள் நிறைந்து கிடந்தன. அதற்கு மத்தியில் எலிகள் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தன.

மயான அமைதியுடன் காணப்பட்ட அந்த வீட்டின் ஒரு அறையில் மூலையில் பெண் ஒருவர் அப்பாவியாக அமர்ந்து இருந்தார். இன்னொரு பெண் அங்கு கிடந்த குப்பைகள் மத்தியில் படுத்து இருந்தார். அவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருட்டறையில் கழித்து விட்ட அவர்கள் வெளியே வந்ததும் ஏதோ ஒருவித புது உலகத்தை பார்ப்பது போல் பார்த்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அந்த 2 பெண்களையும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘அந்த 2 பெண்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. அவர்களின் இந்த நிலைக்கு உணவு இன்மையும், பொருளாதார வசதியின்மையுமே காரணம் ஆகும். மற்றபடி அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை’ என்று தெரிவித்தனர். அந்த 2 பெண்களும் சகோதரிகள் ஆவார்கள். அவர்களில் மூத்தவர் பெயர் நர்சி (வயது 57). இளையவர் முத்து (55). நர்சிக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். முத்துவுக்கு திருமணம் ஆகவில்லை. யாராவது பரிதாபப்பட்டு உணவு கொடுத்தால், அதை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளனர்.

தெரிந்தவர்கள் ரூ.5, ரூ.10 என்று கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளும் அவர்கள், அதுவே ரூ.100 என்றால் வாங்க மறுத்து உள்ளனர். தற்போது தன்னார்வ தொண்டு அமைப்பினரின் உதவியால், அந்த சகோதரிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் தேவையாக இருப்பதாலும், அவர்கள் வசித்து வந்த வீடு பாழடைந்து கிடப்பதாலும் அவர்களுக்கு ஒரு புதுவாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சகோதரிகள் குறித்து மாநில மகளிர் ஆணையத்துக்கு மாவட்ட மகளிர் நல மேம்பாட்டு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே 2 இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து கற்பழிப்பு: வாலிபர் கைது!!
Next post குற்றங்கள் குறைய சூலூர் போலீஸ் நிலையத்தில் கிடா வெட்டி பரிகார பூஜை: பொதுமக்கள் அதிர்ச்சி!!