குளியலறை கட்டும் விவகாரத்தில் ராணுவ வீரர் மனைவிக்கு கொலை மிரட்டல்: கட்டிட தொழிலாளி மீது புகார்!!
ராஜபாளையம் அருகே வாகைகுளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வம், ராணுவ வீரர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 35).
இவர்கள் வீட்டில் குளியலறை கட்ட திட்டமிட்டனர். இதற்காக அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சொக்கர் (35) என்பவரிடம் பழனிச் செல்வம் பேசியுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாயத்தில் இருந்து பழனிச்செல்வம் வீட்டிற்கு குளியலறை கட்டிக் கொடுத்துவிட்டனர். இது சொக்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பழனிசெல்வம் வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த செல்லம்மாளிடம் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து கீழராஜ குலராமன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து சொக்கரை தேடிவருகிறார்.