திருமண பந்தலுக்குள் புகுந்த லாரி: 5 பேர் உடல் நசுங்கி சாவு!
உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண பந்தலுக்குள் திடீரென லாரி புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
ரேபரேலி மாவட்டத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த கூரியர் நிறுவன லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பந்தலுக்குள் புகுந்தது. இதனால் பந்தல் சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி உயிருக்குப் போராடினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து கிரேன் மூலம், பந்தலுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 5 பேர் பலியானதாகவும், காயமடைந்த 10 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.