13 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 4 பேருக்கு மரண தண்டனை: காஷ்மீர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!

Read Time:1 Minute, 50 Second

2778ee72-410d-4eb1-ba19-995d781bc9ef_S_secvpfஅரிதிலும், அரிதான வழக்காக கருதி 8 ஆண்டுகளுக்கு முன்னர் 13 வயது சிறுமியை கற்பழித்த நால்வருக்கு ஜம்மு-காஷ்மீர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியான அந்த சிறுமியை கடந்த 2007-ம் ஆண்டு கடத்திச் சென்று கூட்டாக கற்பழித்த இந்த நால்வரும், அவளது கழுத்தை அறுத்துக் கொன்று, ரகசியமாக புதைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளிகளை கைது செய்து குப்வாரா மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் 88 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 2012-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் சார்பில் வீரதீர செயல்களை புரிந்த சிறுவர்-சிறுமியருக்கு வழங்கப்படும் விருதுக்கு இச்சம்பவத்தில் பலியான சிறுமியின் பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரிதிலும், அரிதான நிகழ்வாக கருதி குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து குப்வாரா மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முஹம்மது இப்ராகிம் வானி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல பெண்களுடன் சேட்டை விட்டவர், இன்றைய “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின் வவுனியாத் தலைவராம்.. என்ன கொடுமை இது??
Next post செம்மரம் கடத்தல் நடிகை மூலம் பணம் பரிமாற்றம் நடந்தது எப்படி? போலீசார் அதிரடி விசாரணை