கொப்பல் அருகே கற்பழித்த மடாதிபதியுடன் பெண்ணுக்கு திருமணம்!!

Read Time:5 Minute, 53 Second

02282723-32fb-4302-9671-80aa5b3d8ada_S_secvpfகர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் சாமளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 26). இவருக்கும் சாமளாபுரா அருகே உள்ள ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி திருமணம் நடந்தது.

கடந்த 31-ந்தேதி சங்கரம்மா தனது கணவர் ஈரண்ணாவுடன் கிராமத்தில் உள்ள மடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த மடாதிபதி அனுமந்தப்பாவிடம் புதுமணத் தம்பதியினர் ஆசிவாங்கினர். அப்போது அனுமந்தப்பா, சங்கரம்மாவின் அழகில் மயங்கி, அவரை அனுபவிக்க எண்ணினார். அதற்காக ஒரு திட்டத்தையும் அவர் தீட்டினார். அதன்படி ஈரண்ணாவிடம் பூஜை செய்தால் கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையுடன் நன்றாக வாழலாம் என்று கூறி பூஜை பொருட்கள் வாங்கி வரும் படி கூறி கடைக்கு அனுப்பிவைத்தார். இதனால் ஈரண்ணா கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு மடத்திற்கு வந்தார். ஆனால் அங்கு மடாதிபதி அனுமந்தப்பாவும், சங்கரம்மாவும் இல்லை. இதனால் ஈரண்ணா தனது மனைவி வீட்டிற்கு சென்றிருக்கலாம் என கருதி வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கும் சங்கரம்மா இல்லாததால் அதிர்ச்சி அடைந்த ஈரண்ணா, பல இடங்களில் தேடி பார்த்தார். இருப்பினும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

மடாதிபதியின் நயவஞ்சகத்தை அறியாத ஈரண்ணா சம்பவம் நடந்த 3 நாளுக்கு பிறகு மடாதிபதி அனுமந்தப்பாவை சந்தித்து, தனது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அனுமந்தப்பா, எனது தெய்வீக சக்தி மூலம் உனது மனைவி எங்கே இருக்கிறார் என்பதை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து தருவதாக கூறி பூஜை செய்துள்ளார்.

பூஜை நடக்கும் போதே, சாமாளாபுராவில் உள்ள மலை மல்லேஸ்வரா கோவிலில் சங்கரம்மா இருப்பதாக அனுமந்தப்பா கூறியுள்ளார். இதையடுத்து ஈரண்ணா கோவிலுக்கு சென்று, அங்கு தனியாக இருந்த சங்கரம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் 3 நாட்களாக எங்கே சென்றாய் என்று சங்கரம்மாவிடம் ஈரண்ணா கேட்டுள்ளார். அப்போது, தன்னை மடாதிபதி அனுமந்தப்பா வசியம் செய்து பல்லாரியில் உள்ள மரியம்மன கிராமத்திற்கு அழைத்து சென்று ஒரு வீட்டில் சிறை வைத்து 3 நாட்களாக கற்பழித்து விட்டதாக தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஈரண்ணா, இனி உன்னுடன் வாழமாட்டேன் என்று கூறி சங்கரம்மாவை வீட்டில் இருந்து வெளியேற்றினார். இதற்கிடையே மடாதிபதி அனுமந்தப்பாவும் மடத்தில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இதனால் செய்வது அறியாது தவித்த சங்கரம்மா, சம்பவம் குறித்து கொப்பல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அந்த புகாரில், மடாதிபதி அனுமந்தப்பா என்னை கற்பழித்துவிட்டார். இதனால் எனது கணவர் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்து, வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டார். எனவே, அனுமந்தப்பாவை கண்டுபிடித்து என்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு, கொப்பல் புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து கொப்பல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மடாதிபதி அனுமந்தப்பாவை தேடி வந்தனர். ஆனால் போலீசார், அனுமந்தப்பாவை பிடிக்க தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சங்கரம்மாவின் உறவினர்களும், கிராம மக்களும் மடாதிபதி அனுமந்தப்பா எப்படியும் மடத்திற்கு வருவார் என கருதி, மடத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு அனுமந்தப்பா தனது மடத்திற்கு வந்துள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உடனே மடத்திற்கு விரைந்து சென்றனர். இதை பார்த்த அனுமந்தப்பா அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும் அவரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்.

உடனே சிறிது நேரத்திலேயே அனுமந்தப்பாவையும், சங்கரம்மாவையும் மலை மல்லேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சாமி முன்னிலையில் இருவருக்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான 2 ஆண்டுகளாக யுத்தக்களம்: கருப்புத்தோல் கணவன் தலையை சுத்தியலால் நசுக்கி கொன்ற இளம்பெண்!!
Next post திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு விற்பனை!!