நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஓட்டம் : நீண்ட நாள் காதலனை மணந்தார்
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகளான ஸ்ரீஜா தன்னுடைய குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக தனது நீண்ட நாள் காதலரான சிரிஷ் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார். தெலுங்கு நடிகரும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான சிரஞ்சீவியின் இரண்டாவது மகள் ஸ்ரீஜா. இவருக்கும் சிரிஷ் பரத்வாஜ்க்கும் காதல் இருந்து வந்தது. இதற்கு ஸ்ரீஜாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காதல் விவகாரத்தால் ஸ்ரீஜா வீட்டில் சிறை வைக் கப்பட்டார். இருப்பினும் காதலனையே மணப்பதில் ஸ்ரீஜா உறுதியாக இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்து தப்பிய ஸ்ரீஜாவுக்கும் சிரிஷ்க்கும் ஐதராபாத்திலுள்ள ஆர்ய சமாஜ் மடத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதன் பின்னர் ஸ்ரீஜா நிருபர்களிடம் கூறுகையில், “நானும் சிரிஷ்சும் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வந்தோம். இதையறிந்ததும் எனது பெற்றோர் என்னை கல்லுõரிக்கு செல்ல விடாமல் ஓராண்டாக வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தனர். இத்திருமணத்துக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். என்னுடைய குடும்பத் தினரிடம் இருந்து ஆபத்து ஏற்படலாம் என கருதுவதால் போலீசார் எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” என்றார். சிரிஷ் கூறுகையில், “”எங்களுடைய திருமணம் கலப்பு திருமணம். நாங்கள் இருவரும் மேஜர்கள். சிரஞ்சீவி மாநிலத்தில் செல்வாக்கானவர் என்பதால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டும்,” என்றார்.