நேபாளத்தில் சிக்கித் தவித்த 14-வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணியினர் டெல்லி திரும்பினர்!!

Read Time:2 Minute, 46 Second

529efdff-889a-4d0b-a67d-ebaf10c481bf_S_secvpfநேபாளத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 2200 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து உள்ளனர். மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலநடுக்கத்தில் இந்தியாவின் 14 வயதுக்குட்பட்டோர் பெண்கள் கால்பந்து அணி ஈரானுக்கு எதிராக 3-வது இடத்திற்கான போட்டியில் விளையாட பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டனர். இன்று அவர்கள் பத்திரமாக இந்தியா திரும்பினார்கள்.

அவர்கள் சிக்கிக்கொண்டது குறித்து பயிற்சியாளர் மேமொல் ராக்கி கூறியதாவது:-

18 வீராங்கனைகள் உள்பட 20 பேர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த போட்டியை பார்ப்பதற்காக 100 பேர் மைதானத்தில் அமர்ந்திருந்தனர். நாங்கள் பயிற்சியை முடித்துக்கொள்ளும்போது திடீரென மைதானம் அதிர்ந்தது. உடனே நாங்கள் நடு மைதானத்திற்குள் ஓடினோம். அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்தோம். எங்களுக்கு அது உண்மையான பயங்கரமான தருணம். வீராங்கனைகள் அனைவரும் 14 வயதுக்குட்பட்டோர்கள். அவர்கள் இதுபோன்ற மோசமாக தருணத்தை தங்கள் வாழ்வில் பார்த்திருக்க மாட்டார்கள். நிலநடுக்கம் முடிந்த பின் ஹோட்டலுக்கு திரும்பினோம். அதன்பின் நாங்களும், ஈரான் வீராங்கனைகளும் ஹோட்லுக்கு வெளியே தூங்க முடிவு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து விமானத்துறை மந்திரி பிரபுல் பட்டேல் கூறும்போது ‘‘வீராங்கனையும் ஐபிஐஎஸ் ஓட்டலில் தங்கவைக்கப்படுகிறார். அவர்கள் நாளை சொந்த ஊருக்கு திரும்புவார்கள்’’ என்றார். நேபாளத்தில் சிக்கித் தவித்த 14-வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணியினர் டெல்லி திரும்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை நீத்து அகர்வால் கைது!!
Next post குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற பெண்ணை காரில் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரர்கள்!!